கோவையில் வனதியாகிகள் தினம் அனுசரிப்பு; பணியின் போது உயிரிழந்த அதிகாரிகளுக்கு மரியாதை செய்த வன அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர்!

கோவையில் பணியின் போது உயிரிழந்த வன அதிகாரிகளை நினைவு கூரும் வகையில், வனக்கல்லூரி வளாகத்தில் வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவு தூணிற்கு அதிகாரிகள் மரியாதை செய்தனர்.


கோவை: வனத்தைப் பாதுகாப்பதற்காக பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் மூலம் செப்டம்பர் 11 ஆம் தேசிய வன தியாகிகள் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவானது தேசிய அளவில் ஒவ்வொரு வனச்சரக்கத்திலும் பணியின் போது உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் வகையில் அவர்களுக்கு மரியாதை செய்து வன அதிகாரிகளால் இத்தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.



அதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.



அப்போது கல்லூரியில் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக கடந்த 2017 ஆம் ஆண்டு நினைவுத் தூணிற்கு வனத்துறைகள் மலர்கள் வைத்தும், காவல்துறை சார்பில் 27 குண்டுகள் முழங்கவும் வன தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. குறிப்பாக இவ்விழாவில் அண்மையில் பணியில் உயிரிழந்த வனக்காவலர் சதீஸ்குமார் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.

இதனையடுத்து விழாவின் போது பேசிய அதிகாரிகள், வனத்தையும், வன உயிரினங்களை பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகத்தை நினைவுகொள்ளவும், சக ஊழியர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகக் இத்தினம் கடை பிடிக்கப்படுவதாக தெரிவித்தனர். வனத்துறை சார்பில், தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தின் இயக்குநரும் கூடுதல் முதன்மை வன பாதுகாவலருமான மஞ்சுநாதா மற்றும் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மாநில வன பணிகளுக்கான முதல்வர் திருநாவுக்கரசு, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...