அகில இந்திய அளவிலான தரவரிசையில் உடுமலை அரசு கலைக்கல்லூரி 98வது இடத்தைப் பிடித்து சாதனை - பேராசிரியர்கள் பெருமிதம்!

கோவை: அகில இந்திய அளவிலான கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலில் உடுமலை அரசு கலைக்கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது.


கோவை: அகில இந்திய அளவிலான கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலில் உடுமலை அரசு கலைக்கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது.

அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

இந்த மதிப்பீடு கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்களின் சேர்க்கை விகிதம், உள்கட்டமைப்பு வசதி, பேராசிரியரின் கல்வித்தகுதி, ஆராய்ச்சி, கட்டுரைகள் வெளியீடு, ஆசிரியர் மாணவர் விகிதம் பேராசிரியர்களின் பணி அனுபவம், மாற்றுத்திறனாளி சேர்க்கை, போன்றவற்றை மையமாக வைத்து இந்த தரவரிசை மதிப்பீடு வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு உடுமலை அரசு கலைக் கல்லூரி 98வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் இந்த தரவரிசையில் 28 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள 5 அரசு கலைக்கல்லூரிகள் அனைத்துமே நகர்ப்புறங்களில் அமைந்துள்ளது.

கிராமப்புற இளைஞர்களின் வாழ்வை முன்னேற்றும் கிராமப்புற கல்லூரிகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி முதலிடம் வகிக்கிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இந்த பேராசிரியர்களின் உறுதுணையோடு பலர் முனைவர் பட்டம் பெற்று வருகின்றனர். அது கல்லூரிக்கு பெருமை சேர்க்கிறது. ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் இங்கு அதிகளவில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கி அவர்கள் வாழ்வில் முன்னேற இக்கல்லூரி பேராசிரியர்கள் பேருதவியாக திகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல, கல்லூரித் தேர்வுகளில் பல்கலைக்கழக அளவில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த தரவரிசை மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க உறுதுணையாக இருந்த முனைவர் H.B. ராமலிங்கம், முனைவர் கருணாநிதி, முனைவர் வெங்கடேஷ் ஆகியோருக்கு கல்லூரி பேராசிரியர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

இக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடின உழைப்பால் மேலும் சிறப்பு பெறும் அடுத்த ஆண்டு மேலும் இக்கல்லூரி முன்னேற்றப் பாதையில் செல்லும் என கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...