சர்க்கரை நோயால் (டைப் 1) பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்து வழங்க ரூபாய் 30 ஆயிரம் தேவைப்படுவதால், மக்கள் உதவ முன்வர வேண்டும் என கோவை இதயங்கள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் டாக்டர். கிருஷ்ணன் சுவாமி நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 500 ஏழை குழந்தைகளுக்கு இன்சுலின் தொடர்ந்து கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று 'இதயங்கள் அறக்கட்டளை' நிறுவனத் தலைவர் டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 500 ஏழை குழந்தைகளுக்கு தொடர்ந்து இன்சுலின் மற்றும் மருந்து உதவி கிடைக்க கருணை உள்ளங்களின் உதவி தேவைப்படுகிறது என, டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.
டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று 'இதயங்கள் அறக்கட்டளை' நிறுவன தலைவர் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:
சர்க்கரை நோய், 'டைப் 1' மற்றும் 'டைப் 2' என இரண்டு வகைப்படும். பொதுவாக பலருக்கு 'டைப் 2' சர்க்கரை நோய் பாதிப்பு தான் அதிகம் காணப்படும். 'டைப் 1' சர்க்கரை நோய் என்பது மிகவும் அபாயகரமான நோயாகும். இந்த நோயால், 1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, கண் பார்வை குறைபாடு, அதிக பசி உள்ளிட்டவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.
இதயங்கள் அறக்கட்டளையின் பங்களிப்பு.
இந்த நோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள தவறினால் 'டயபடிக் கோமா' என்று சொல்லக்கூடிய அபாயகரமான நிலைக்கு சென்று உயிரிழப்பு ஏற்படும். இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்படும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மருத்துவ உதவி இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'இதயங்கள் அறக்கட்டளை' துவங்கி நடத்தி வருகிறேன்.
பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை..!;
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில் இன்சுலின் மற்றும் மருந்து வழங்கி வருகிறோம்.
இன்சுலின் மருந்து பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும். இது குறித்து ஏழை பெற்றோர் பலருக்கு தெரியாத காரணத்தால், அவர்கள் இவற்றை வெளியே வைத்து பயன்படுத்துகின்றனர். அது அந்த குழந்தைக்கு எந்த பயனையும் அளிக்காது. இதை கருத்தில் கொண்டு குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இது தவிர மருந்தை வைக்க ஏதுவாக, சிறிய பிரிட்ஜ் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கி உள்ளோம்.
டைப் '1' சர்க்கரை நோயால் கோவை மாவட்டத்தில் 700 குழந்தைகள் வரை பாதிப்பு
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 700 குழந்தைகள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 500 குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கள் அறக்கட்டளை சார்பில் அந்த ஏழை குழந்தைகளுக்கு, தொடர்ந்து இன்சுலின் மற்றும் மருந்து உதவி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு ஏழை குழந்தைக்கு ஒரு ஆண்டு முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்து வழங்க 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. குழந்தைகளின் நலன் காக்க நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
டைப் '1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுக்கு சிரமப்பட்டு வரும் ஏழை குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் இதயங்கள் அறக்கட்டளையை 9042858882, 8526421150 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.