திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இழப்பீட்டுத் தொகையை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கினார்.

கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கர வாகனம் மற்றும் ஜேசிபி இயந்திரம் இரண்டும் மோதிக் கொண்ட விபத்தில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டார்.



இந்த நிலையில், அவருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் 47 லட்சம் ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்கினார்.

அதேபோல், திருப்பூரைச் சேர்ந்த விஜய கார்த்திக் என்ற காவலர் சென்னையில் பணியாற்றி வந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக விஜயகார்த்திக் குடும்பத்தினரிடம் இழப்பீட்டுத் தொகையாக 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...