கோவை: கோவையில் கல்லூரி மாணவனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20), இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்து பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை இவர் திருச்சி ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை கேட்டனர்.
ஆனால், அவர் செல்போனை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மாணவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21), நாகராஜ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.