திருப்பூர்: திருப்பூரில் திருடிய இருசக்கர வாகனம் மூலம் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி தனது மனைவி மாலதியுடன் கடந்த ஜூலை மாதம் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இவர்கள் இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த 2 பேர் மாலதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.
இதுகுறித்து கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிற்றரசன் கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் இருந்து 4 பவுன் சங்கிலியைப் பறித்தது தெரியவந்துள்ளது.
மேலும், நகையை பறித்துவிட்டு உதயமூர்த்தி என்பவருடன் 3 பேரும் தப்பிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த வழக்கில் இவர்கள் குற்றவாளிகளாகத் தேடப்பட்டு வந்துள்ளனர்.
இதனிடையே, திருப்பூரில் அவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த திண்டுக்கல் காவல்துறையினர் திருப்பூர் வந்து, இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடி அதன்பிறகு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.