கோவை செம்மேடு பகுதியில் இரண்டு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்.

கோவை செம்மேடு அருகே, வெவ்வேறு சம்பவங்களில் 18 வயது நிறைவடையாத இரு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்.

கோவை: கடந்த 3 நாள்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்களாக உள்ளதால்,எங்கு பார்த்தாலும் மண்டபங்களில், கோவில்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது. உடனே, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.

கோவை செம்மேடு அருகே 17 வயது சிறுமிக்கும், பாபு (23) என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதே போல, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தாமணி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பது"குழந்தை திருமணம் தடுப்பு சட்டம்- 2006'ன் படி குற்றம். அவ்வாறு, 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வாலிபர்,, இத்திருமணத்தை நடத்திய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...