ஆன்லைன் மூலமாக 2-வது திருமணத்திற்கு விண்ணப்பித்த  பெண்ணிடம் 15 லட்சம் பறித்து மோசடி செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார்

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் ( 40 ) என்பவர் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

கோவை: ஆன்லைன் திருமண தகவல் அமையத்தின் மூலமாக இரண்டாவது திருமணத்திற்கு விண்ணப்பித்த பொது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூபாய். 15லட்சம் வரை கோவையை சேர்ந்த ஒரு நபர் மோசடி செய்துள்ளார் என கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

சென்னை நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரேவதி (32). இவரது கணவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து, மறுமணம் செய்ய அவர் ஆன்லைன் திருமண சேவை மூலம் விண்ணப்பித்து அவருக்கு ஏற்ற துணையை தேடு வந்துள்ளார். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தராம்குமார்( 40 ) என்பவர் ரேவதியை தொடர்பு கொண்டுள்ளார். 

தொடர்ந்து, ரேவதியின் செல்போன் எண்ணை பெற்ற ராம்குமார் ரேவதியை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். 

இதையடுத்து, அவர்கள் இருவரும் நட்பாக முதலில் பழகத் தொடஙகி, இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ரேவதியை உறுதியாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, ராம்குமார் தான் சொந்த தொழில் துவங்குவதாக கூறி 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகைகளை, தன்னிடம் பெற்றதாக ரேவதி அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

ஆனால், கடந்த சில மாதங்களாக ராம்குமார், என் தொடர்பை மெதுவாக துண்டிக்க தொடங்கினார்.பின்னர்,அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.இதையடுத்து, சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ராம்குமார் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி,பெற்றுக்கொண்ட பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு கேட்டபோது, ராம்குமார் பணம் நகைகளை திருப்பித் தர முடியாது என்று கூறியதோடு, அடித்து விரட்டியதாக ரேவதி புகாரில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ரேவதி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராம்குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...