கோவை போத்தனூர், சித்தனபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை போலீசார் ஆபாசமாக பேசியதாக சுந்திராபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம்.
கோவை: கோவை, போத்தனூர் சித்தனபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை ஆபாசமாக பேசிய காவல்துறை உதவி ஆய்வாளரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று கோவை சுந்திராபுரம் பகுதியில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து பேசிய இந்து முன்னனி மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் கூறியதாவது:-
கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் சிலைகளை கரைப்பதற்க்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கோவை போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன், போத்தனூர் சித்தன்னபுரத்தில் இந்து முன்னணி பொருப்பாளரிடம் மிகவும் ஆபாசமாகவும், வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க அரசு, இந்து விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.