கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்குப் படி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் பின்புறம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் ரவுண்டானா மையத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களுடைய சிலை உள்ளது.
இந்த சிலைக்குப் பிறந்தநாள், நினைவு நாள் உட்பட திமுக நிகழ்ச்சிகளில் அனைத்து கட்சியினர் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் மாலை அணிவிப்பதற்காகச் செல்லக்கூடிய படிகள் மிகவும் பழுதடைந்து இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று இரவிலிருந்து இரும்பு படிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து திமுக பிரமுகர் இடம் கேட்டபொழுது:-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முப்பெரும் விழா அறிவித்துள்ளார்கள். கலைஞர், அண்ணா, பெரியார் அவர்களுடைய நினைவுகளைக் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதனால் அண்ணா சிலைக்குச் சுற்றி அழகுபடுத்தும் நிகழ்வு மற்றும் படிகள் அமைக்கும் பணி திமுக சார்பாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
பகல் நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் இரவு நேரத்தில் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.