கோவையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு.!!

கோவை: கோவையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.


கோவை: கோவையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கத் தமிழக அரசு தடை விதித்தும் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளித்துள்ளது.



அவர் வீடுகளில் வைக்கப்படும் சிலைகளைக் கரைப்பதற்காகக் கோவை மாவட்டத்தில் 48-நீர்நிலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலை கரையோரங்களில் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிலைகளைக் கரைக்க வருபவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்று கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கரைகள் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினிகள் பொடிகள் தூவப்படுகிறது.



கொண்டுவரப்படும் சிலைகள் அனைத்தும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினரால் குளங்களுக்குள் விடப்படுகிறது.

நீண்ட நேரம் அங்கு நிற்க காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. இதற்காகச் சிலைகள் கரைக்கப்படும் அனைத்து குளங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...