வால்பாறை: வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் எடுத்துச் செல்லக்கூடாது எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், அதனைப் பின்பற்றும் வகையில் வால்பாறை நகரில் உள்ள கோவில்களில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகாமையில் உள்ள, நடுமலை ஆற்றில் அபிஷேக ஆராதனை செய்யப்பட்ட பின்பு ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்த விநாயகர் ஊர்வலத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், காவல்துறையினர் ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் ராஜா தலைமையில், ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. சிலைகள் கரைக்கும் ஆற்றில் வால்பாறை தீயணைப்புத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.