கோவை: கோவையில் லேப்டாப் திருடிசென்ற குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (22), இவர் காந்திபுரம் ஆறாவது வீதியில் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் பகுதி நேர வேலைக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் கல்லூரிக்குச் சென்று விட்டு மாலையில் தனது அறைக்குத் திரும்பினார். அப்போது அங்கிருந்த 3-லேப்டாப்களை காணவில்லை.
மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கோகுல்நாத் ரத்தினபுரி காவல்துறையிடம் புகார் செய்தார்.
காவல்துறை வழக்குப் பதிவு செய்து லேப்டாப் திருடர்களைத் தேடி வருகின்றனர்.