விபத்தில் இறந்து அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை அடக்கம் செய்த பெண் போலீஸ்.!!

கோவை: விபத்தில் இறந்து அடையாளம் தெரியாத முதியவர் பிணத்தை அடக்கம் செய்த பெண் போலீஸ் அடக்கம் செய்தார்.


கோவை: விபத்தில் இறந்து அடையாளம் தெரியாத முதியவர் பிணத்தை அடக்கம் செய்த பெண் போலீஸ் அடக்கம் செய்தார்.

கோவை செப்டம்பர் 10 கோவை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் வயதானவர் ஒருவர் இறந்துபோனார் காவல்துறை விசாரணையில் அவர் யார் என்பது தெரியவில்லை தொடர்ந்து பெண் காவலர் ஒருவர் அந்த சடலத்தைப் பெற்று எல்லா சடங்குகளும் செய்து முறைப்படி அடக்கம் செய்துள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மரணம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் காவல் துறையினர் விரைந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இறந்தவரது சடலத்தை அன்னூர் காவல் நிலைய தலைமை பெண் காவலர் பொன்மணி பெற்று உரியச் சடங்குகளைச் செய்து நல்லடக்கம் செய்துள்ளார். அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை உரியச் சடங்குகளைச் செய்து நல்லடக்கம் செய்த அன்னூர் தலைமைப் பெண் காவலரின் இச்செயல் இன்னும் மனிதம் மரித்துப் போகவில்லை. என்பதற்கு ஒரு சான்றாகவே அமைந்துள்ளது.

தவறுகள் செய்யும் காவலர்களிடையே இதுபோன்ற மனிதநேயமிக்க காவலர்களும் இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...