கோவை சமூக உளநல மையத்திற்கு இதுவரை 15-ஆயிரம் பேர் வரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர்.!!

கோவை: கோவை சமூக உளநல மையத்திற்கு இதுவரை 15-ஆயிரம் பேர் வரை தொடர்பு கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சமூக உளநல மையத்திற்கு இதுவரை 15-ஆயிரம் பேர் வரை தொடர்பு கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை உதவிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதே போல் கொரோனா தொடர்பான புகார்களைத் தெரிவிக்கவும் 1077-என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனிடையே கோவை மாவட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சமூக உளநல ஆதரவை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் சமூக உளநல மையம் திறந்து வைக்கப்பட்டது.

இம்மையத்தில் இரண்டு உளவியல் மருத்துவர்கள் தலைமையில், சமூகப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் உளவியலாளர்கள் என 12-பேர் ஆலோசனைகள் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனைகள், கொரோனா தொற்று பரவல் குறித்த பயம், தடுப்பூசி தொடர்பான பயம், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு நபர்களுக்குச் சிகிச்சை குறித்த ஆலோசனைகள், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த பிறகு ஏற்படக்கூடிய உளவியல் சார்ந்த பிரச்சனைகள், ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் ரீதியிலான பிரச்சனைகளைக் கையாள்வதற்கான ஆலோசனைகள் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் உளவியல் ஆலோசனை, சமூக நல்வாழ்வு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தொடர் கண்காணிப்பு போன்றவற்றிற்கு விரிவான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இச்சமூக உளநல மையத்தை அனைத்து நாட்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 07.30மணி வரை 0422-2200029, 0422-2201824, 0422-2201825, 0422-2201826, 0422-2201828 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். இந்த திட்டம் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சமூக உளநல மையம் துவங்கப்பட்டதிலிருந்தே மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்பக் காலத்தில் தினமும் 200-நபர்கள் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக் கொண்டனர்.

கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் தற்சமயம் தினமும் 80-முதல் 100-நபர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுகின்றனர். அதன் அடிப்படையில் சுமார் 15-ஆயிரம் பேர் இதுவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர்,’’என்றார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...