கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையத்தில் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சென்ற மணமக்களை கிராம மக்கள் வாழ்த்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கோடங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி, ராஜாமணி தம்பதியரின் மகன் பிரகாஷ், மற்றும் பணப்பட்டி செல்லக்குமாரசாமி, பத்மா தம்பதியரின் மகள் சரண்யாவுக்கு இன்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அதிகாலையில் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே, திருமணம் முடிந்து மணமக்களை காரில் அழைத்துச் செல்வது வழக்கம்.

ஆனால், அழிந்து வரும் கிராமிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் மணமக்கள் திருமணம் நடந்த இடத்திலிருந்து மணமகன் வீடு வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரம்வரை மாட்டு வண்டியிலேயே சென்றனர்.

விஞ்ஞான உலகில் பாரம்பரிய கலாச்சாரங்களை மறந்து புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிராமிய கலாச்சாரங்களை மறக்காமல், பாதுகாக்கும் வகையில் இது போன்று மாட்டுவண்டியில் சென்று கலாச்சாரத்தை பாதுகாக்கவே மணமகள் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மணமக்கள் அதிகாலை நேரத்தில் கிராமப்பகுதிகளில் மாட்டுவண்டியில் சென்றதை கிராம மக்கள் பார்த்து வாழ்த்தினர்.