கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம்..! 750 பேர் பயன்பெற்றனர்!

கோவை: கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 6வது முகாமில் 2வது நாள் நடைபெற்ற இலவச தடுப்பூசி முகாமில் 750 பேர் பயன்பெற்றனர்.


கோவை: கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச தடுப்பூசி முகாமில் 750 பேர் பயன்பெற்றனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 6வது தடுப்பூசி முகாமின் 2வது நாளாக இன்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பி.ஆர். அருள்மொழி தலைமை தாங்கினார். செயலாளர் கே. கலையரசன், பொருளாளர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், இணை செயலாளர் ரீனா, ஆகியோர் வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம், முபினா, தங்கராஜ், உதயக்குமார், ரமேஷ், வைகலாநிதி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

கொரோனா தடுப்பூசி முகாமிற்கு வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர், குமாஸ்தாக்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு நாளைக்கு 750 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும்பொழுது ஆதார் அடையாள அட்டையுடன் வரக்கூடிய நீதிமன்ற ஊழியர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...