கோவை: வால்பாறையில் ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் உள்ள வாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாபு (25). இவர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள பர்ணிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் வேலை நிமித்தமாக சோலையாறு அணைக்கு இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். வால்பாறை ஸ்டான்மோர் சாலையில் படகு இல்லம் அருகில் உள்ள வளைவில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற காரை முந்தி சென்றுள்ளார்.
அப்போது, எதிரே வந்த வால்பாறை நகராட்சி ஜீப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஷாபு மற்றும் அவருடைய நண்பர் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் ஷாபுவிற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஷாபுவின் இருசக்கர வாகனமும் சேதம் அடைந்தது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.