திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறையாத சூழ்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய தடை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், தனியாருக்கு சொந்தமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அது மட்டும் இன்றி வீடுகளிலும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், 7 உதவி ஆணையர்கள், 12 ஆய்வாளர்கள் உள்பட சுமார் 700 போலீசாரும், திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், 2 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பி, 34 ஆய்வாளர்கள் உள்பட சுமார் 900 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.