கோவையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர விநாயகர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வழிபாடு..!

கோவை: கோவை தேர் நிலைத்திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர விநாயகர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.



கோவை: கோவை தேர் நிலைத்திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர விநாயகர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது எனவும் கொரோனா நோய் தீர்ந்திட வேண்டும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகும் வேண்டும் என்பது தங்களின் பிரார்த்தனை என்றார்.

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதலில் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது எனவும், பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கியதாக கூறினார்.

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தி இருக்கின்றார் எனவும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல விநாயகர் கோவில்கள் மூடி இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

திரையரங்கு, பூங்கா என எல்லாம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சில நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட விநாயகர் கோவில்கள் அனுமதித்து இருக்கலாம் என்றார்.

நாங்கள் கூட்டமாக ஊர்வலம் செல்ல அனுமதி கேட்கவில்லை என தெரிவித்த அவர், சொந்த இடத்தில் வைத்திருக்கின்ற சிலைகளை நாங்களே ஒரு சிலர் சென்று கரைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் முதலில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக தெரிவித்த அவர், சட்டமன்றத்தில் விநாயகர் சிலையை தடை செய்வது அரசின் நோக்கமல்ல என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கின்றார் எனவும், நாங்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபாடு நடத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

திமுக ஈவேரா மாதிரி இல்லை, எனவும் அண்ணா துரை பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன், அதற்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் என்று சொன்னவர் என கூறிய அவர், விநாயகர் சதுர்த்திக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று கூறினார்.

மேலும், இந்து அமைப்புகளை அழைத்துப் பேசி இன்னும் சுமூகமாக விழாவை நடத்தி இருக்கலாம் என தெரிவித்த அவர், தமிழக முதல்வராக ஸ்டாலின் அவரது கடமையை செய்கின்றார் எனவும், நாங்கள் எங்களது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வழிபாடு நடத்துகின்றோம் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...