கோவை வேளாண் பொறியியல் துறை சார்பில் 13 விவசாயிகளுக்கு ரூ. 34.50 லட்சம் மதிப்பிலான வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!!

கோவை: கோவை வேளாண் பொறியியல் துறை சார்பில் 13 விவசாயிகளுக்கு ரூ. 34.50 லட்சம் மதிப்பிலான வேளாண் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினர்.



கோவை: கோவை வேளாண் பொறியியல் துறை சார்பில் 13 விவசாயிகளுக்கு ரூ. 34.50 லட்சம் மதிப்பிலான வேளாண் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினர்.



கோவை லாலி ரோடு சாலையில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் படக்காட்சி அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த விழாவில், 18 பயனாளிகளுக்கு 34.50 லட்சம் மதிப்பிலான வேளாண் தொழில்நுட்ப கருவிகளை வழங்கினர். பாதுகாப்பு திட்டம், நீர்வள மேம்பாட்டுத் திட்டம், நீர் மேலாண்மை, மேலாண்மை இயந்திரமயமாக்கல், வேளாண்மையில் சூரியசக்தி பயன்படுத்தி விவசாயம் செழிக்க செய்தல் ஆகிய பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் வேளாண் பொறியியல் துறை செயல்படுத்தி வருகிறது.

இன்றைய நிலையில், பல்வேறு காரணங்களினால் வேளாண் பணி செய்திட ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் காலி செய்ய வேண்டிய பல வேளாண் சார்ந்த பணிகள் செய்திட இயலாமல் விவசாயிகள் கூடுதல் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

இதற்கு வேளாண்மை இயந்திரம் ஆக்குதல் ஒன்றே சாலச் சிறந்த வழியாகும். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக ரூபாய் 65 கோடிக்கு 1160 புதிய பல வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட தேவைக்கேற்றவாறு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்துறை அமைச்சர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ஆகியோர் துறை மூலம் வாங்கப்பட்ட கருவிகளை அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ளும்படி பிரபலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்ட கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை வளாகத்தில் துறை மூலமாக வாங்கப்பட்ட அனைத்து கருவிகளில் பட காட்சி அரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தினை பார்வையிடும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் கருவியினை தெரிவித்தால் கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, உழுவையுடன் கூடிய இணைப்பு கருவிகளை விவசாயிகளுக்கு கூடுதல் கட்டணமின்றி உழுவை வாடகை மற்றும் வசூல் செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த அரங்கத்தினை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அனைத்து துறை வேளாண் பொறியியல் துறை ஏற்பாடு செய்திருந்த சிறு கருத்துரு கண்காட்சியினை பார்வையிட்டு படக்காட்சி அரங்கத்தினை திறந்து வைத்தனர்.



பின்னர், கோவை மாவட்டத்தின் 13 நபர்களுக்கு ரூ. 34.50 லட்சம் மதிப்பிலான வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொருளியல் உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். வேளாண் பொறியியல் துறையின் கண்காணிப்பு பொறியாளர் உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் சரண்யா ராமச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பி.ஏ விவசாயம் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி, முதன்மை விஞ்ஞானி பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...