உற்பத்தி சார்ந்த சலுகை திட்டத்தின் உச்சவரம்பை 10 கோடியாக குறைத்தால் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு வேலை - தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் தொழில்துறை தகவல்!

கோவை: உற்பத்தி சார்ந்த சலுகை திட்டத்தில் (PLI) உச்சவரம்பு 10 கோடியாக குறைத்து மறுசுழற்சி பெட் பாட்டில், கார்மெண்ட் வேஸ்ட், கழிவு பஞ்சு நூல் இத்திட்டத்தில் சேர்த்தால் புதிதாக 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் தொழில்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: உற்பத்தி சார்ந்த சலுகை திட்டத்தின் (PLI) உச்சவரம்பை 10 கோடியாக குறைத்து மறுசுழற்சி பெட் பாட்டில், கார்மெண்ட் வேஸ்ட், கழிவு பஞ்சு நூல் இத்திட்டத்தில் சேர்த்தால் புதிதாக 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி சார்ந்த சலுகை திட்டத்துக்கு (PLI) அங்கீகாரம் அளித்துள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா/OSMA) நன்றி தெரிவித்துள்ளது.

எனினும், நாட்டின் தொழில் வளர்ச்சியில் முதுகெலும்பாக திகழும் எம்எஸ்எம்இ தொழில்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதலீடு உச்சவரம்பு குறைப்பதுடன் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் பொருட்களையும் இத்திட்டத்தில் சேர்த்தால் புதிதாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா/OSMA) நிர்வாகிகள் அருள்மொழி, ஜெயபால் உள்ளிட்டோர் கூறியதாவது:

ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு மற்றும் பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில்கள், கார்மெண்ட்ஸ் வேஸ்ட் உள்ளிட்ட மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நூலை கொண்டு ஜீன்ஸ், கிச்சன் மேட் அப்ஸ்( Kitchen made ups) உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 550 ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூன்று லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஜவுளித் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உற்பத்தி சார்ந்த சலுகை திட்டத்துக்கு (PLI) மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கு எங்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தில் தற்போது உச்சவரம்பு 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் எம்எஸ்எம்இ பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நோக்கத்திற்காக இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தில் முதலீடு உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக குறைத்தால் கிராமப்புறங்களைச் சேர்ந்த எம்எஸ்எம்இ தொழில் முனைவோர் அதிக எண்ணிக்கையில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் பயன்படுத்தப்படும் பொருட்களான மறுசுழற்சி பெட் பாட்டில், கார்மெண்ட் வேஸ்ட், கழிவு பஞ்சு நூல் உள்ளிட்டவற்றை இத்திட்டத்தில் சேர்த்தால் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் தொழிலில் மட்டும் புதிதாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய ஜவுளித்துறை அமைச்சர், எம்எஸ்எம்இ துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு எங்கள் சங்கம் சார்பில் கோரிக்கை அளிக்க முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...