ஆதார் உள்ளிட்ட அரசு திட்டங்களை பெற கிராம மக்களுக்கு உதவிசெய்த அவினாசிலிங்கம் பல்கலைக் கழக மாணவிகள்


கோவை மாவட்டம், அவினாசிலிங்கம் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவிகள் சார்பில் கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆதார் உள்ளிட்ட அட்டைகளை பெற்றுத்தர திட்டமிடப்பட்டது. 



அதனடிப்படையில், அவினாசிலிங்க பல்கலையின் என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவிகள் சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தெற்குபாளையம், ரங்கம்மாள் காலனி, சுப்ரமணியாம்பாளையம், தொண்டாமுத்தூர், குருடம்பாளையம் பஞ்சாயத்து, வடமதுரை, தொப்பம்பட்டி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், சோமயம்பாளையம், நல்லாம்பாளையம் II, தென்னம்பாளையம், புதுபாளையம், நல்லாம்பாளையம் காந்தி நகர், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்களிடம் தகவல்களை பெற்று அதனை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த உதவியின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை கிராம மக்களும் பெற்று பயனடைய முடியும் என அப்பகுதி மக்கள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



இந்நிகழ்வில், அவினாசிலிங்கம் பல்கலையின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் எஸ்.கௌசல்யா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் கிராம மக்களிடம் பெயர், வயது, வருமானம், பான் அட்டை விபரம் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்தனர்.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...