கோவை: கோவை குற்றால அருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் அருவி தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு உத்தரவின் பேரில் கோவை குற்றாலம் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்துள்ளதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் 12 ஆம் தேதி வரை கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.