கோவை: பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம் முன்பு மரத்தில் ஏறித் தூக்கிட முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களிடையேயும், காவல்துறையிடமும் தெரிவித்தும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
காவல்துறை கீழே இறங்கி வரும்படி தெரிவித்தனர். தனக்கு யாரோ ஒருவர் பணம் தரவேண்டும் தந்தால் மட்டுமே இறங்கி வருவதாகத் தெரிவித்தார். பின்னர் காவல்துறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து வலை விரித்துக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த நபரோ தான் வைத்திருந்த துண்டின் மூலம் மரத்தின் கிளையில் தூக்கிட்ட நிலையில் மரத்திலிருந்து கீழே குதித்து யாரும் எதிர்பாராத வகையில் நடந்து கொண்டார். சற்றும் தாமதிக்காது தீயணைப்புத் துறையினர் மரத்தின் மீது ஏறி அவர் கழுத்தில் உள்ள துண்டினை கத்தியால் அறுத்து வலையில் விழச்செய்து காப்பாற்றினர்.
அந்த நபரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அந்த நபர்? எதன் காரணமாக மரத்தின் மீது ஏறினார்? என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.