கோவை: அன்னூர் பகுதியில் 77-வயது மூதாட்டி மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் வந்து சிகரெட் வாங்குவது போல் நடித்து அவர் கழுத்திலிருந்த 4- பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற ஆசாமியை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை, அன்னூர் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் சுப்பிரமணியம் என்பவரின் மனைவி பார்வதி(77). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த நபர் சிகரெட் வாங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு சிகரெட்டை வேண்டுமென்று பார்வதியிடம் கேட்டுள்ளார். அப்போது சிகரெட் எடுக்கத் திரும்பிய பார்வதி கழுத்திலிருந்த 4-பவுன் தங்க செயினை அந்த மர்மநபர் பறித்துக்கொண்ட அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அப்போது தயாராக பைக்கில் இருந்த 2 வாலிபர்களுடன் செயினை பறித்த மர்ம நபர் தப்பிச் சென்றார். தொடர்ந்து பார்வதி அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.