கோவை: பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு14ம் தேதி நடக்கிறது.

கருமத்தம் பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
4-பேரூராட்சிகளை 2021-22ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையின் போது 24.08.2021-ம் அன்று சட்டசபையில், கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம் பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை ஆகிய 4- பேரூராட்சிகளை நகராட்சியாகத் தரம் உயர்த்தி நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் தொடர் நடவடிக்கையாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 14-ம் தேதி அன்று மாலை 4.30-மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், 4-பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்வு செய்வது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கருத்துக்களைத் தெரிவிக்க இந்த விளக்கக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பேரூராட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகராட்சியாகத் தரம் உயர்வு அடையும் பேரூராட்சி பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.