கோவை: வால்பாறையில் 2 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்து தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 60க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு பறிக்கப்படும் தேயிலை கொழுந்துகள் 20க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் கோயம்புத்தூர், குன்னூர் மற்றும் கொச்சின் ஆகிய பகுதியில் உள்ள ஏல மையங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் இந்திய தேயிலை வாரியத்தில் பதிவு செய்து, அவர்களுடைய வழிமுறை தரக்கட்டுப்பாடு டன் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் மற்றும் சோலையாறு எஸ்டேட்டில் செயல்பட்டு வரும் தேயிலை தொழிற்சாலைகள் உரிய அனுமதி பெறாமல் தேயிலை தூளினை மீண்டும் பயன்படுத்தி பாக்கெட்டுகளாக தயார் செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வின்போது இதை கண்டுபிடித்தனர். இதுபற்றி தேயிலை வாரிய அதிகாரிகள் விளக்கம் கேட்டும் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் உரிய நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, இந்திய தேயிலை வாரியம் இந்த இரண்டு தொழிற்சாலைகளுக்கும் இயங்க அனுமதிக்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.
இதுகுறித்து தேயிலைத் தோட்ட நிர்வாகம் சார்பில் கூறுகையில், இந்திய தேயிலை தோட்ட வாரியத்திற்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்று தெரிவித்துள்ளதாக கூறினர்.
மேலும், உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு சில நாட்களில் தொழிற்சாலை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.