கோவை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்குத் தலைமையேற்று சிறப்புரையாற்றிய வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், ஆசிரியைகள் மாணவிகள் பெண் சிசுக் கொலையை தடுக்க முன் வரவேண்டும். கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று பார்த்து தகவல் தெரிவிப்பது குற்றமாகும். தங்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பந்தமான தொல்லைகள் இடையூறுகள் பற்றி தைரியமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வரதட்சனை கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் பற்றிய தகவல் தெரிவிக்க காவல்துறை SOS செயலியை அறிவித்துள்ளது. இதை அனைத்து பெண்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைக்கான அவசர உதவி எண் 181 எண்ணையும், 1098 கட்டணமில்லா எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். இந்தக் கருத்தரங்கத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், பள்ளி தலைமையாசிரியர் சிவநேசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.