பண்டிகை மற்றும் வார இறுதியை முன்னிட்டு கோவை - சென்னை விமான டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு..! விமான பயணிகள் அதிர்ச்சி!!

கோவை: பண்டிகை மற்றும் வார இறுதி முன்னிட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: பண்டிகை மற்றும் வார இறுதி முன்னிட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விமான பயணிகள் கூறியதாவது:

கோவையிலிருந்து சென்னைக்கு சராசரியாக 3,300 ரூபாய், மும்பைக்கு 5,000 ஆயிரம் ரூபாய் அளவில் விமான கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்நிலையில், பண்டிகை மற்றும் வார இறுதி முன்னிட்டு இன்று கோவை -சென்னை மற்றும் கோவை- மும்பை இடையே இயக்கப்படும் விமானங்களின் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.



குறிப்பாக, கோவையில் இருந்து சென்னைக்கு 9,889 ரூபாய் மற்றும் சென்னையில் இருந்து கோவைக்கு 9,557 ரூபாய் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கேட்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.



அதேபோல, மும்பை - கோவை இடையே இயக்கப்படும் விமானத்தில் பயணிக்க 14,238 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இந்த கட்டணம் மிக அதிகம். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நியாயமான முறையில் கட்டணத்தை வசூலிப்பதை உறுதிசெய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் கடந்த மே மாதம் தினமும் ஐந்து விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், மாதந்தோறும் விமானங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது தினமும் 16 அல்லது 17 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விமானங்கள் இயக்கம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ள போதும், விமான நிறுவனங்கள் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் நிர்ணயித்துள்ள கட்டணம் பயணிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...