கோவை: வால்பாறையில் நகராட்சி கடைகள் வாடகை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள வியாபாரிகள் மாநில தலைமை தலையிட ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் புது மார்க்கெட் பகுதியில் நகராட்சியின் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடை வாடகை உயர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக வாடகை வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது நகராட்சி நிர்வாகம் புதிய வாடகையை நிர்ணயித்து அவற்றை உடனே செலுத்துமாறு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் வாழ்வாதாரம் இழந்த நிலையில், திடீரென கடை வாடகை அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இதுபற்றி விவாதிக்க வால்பாறை வட்டார வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் ஜெபராஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி கடைகள் வாடகை பல மடங்கு உயர்வு, தொழில் வரி, வைப்புத் தொகை அதீதமான உயர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விஷயத்தில் மாநில தலைமை நேரடியாக தலையிட ஏகமனதாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்க தலைவர் A. ஜெபராஜ். பொ.செயலர் M.G. ஷாஜி ஜார்ஜ் மாலிக்கல் பொருளாளர் G ஜேசுதாஸன். உட்பட 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.