கோவை பெரியநாயகன்பாளையத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இன்று உயிரிழந்த நிலையில், இதற்கான காரணம் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதி தான் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம். இங்கு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.
தற்போது யானைகள் இடம்பெயர்ச்சி செய்யும் காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் உள்ள ஏராளமான யானைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், மற்றும் பவானி சாகர் நீர்பிடிப்பு பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதி வரை சென்றுவரும். இப்படி யானைகள் இடம் பெயர்ச்சி செய்த போது பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதிக்கு உட்பட்ட திருமாலூர் பகுதியில் உடல்நலக்குறைவால் ஆண் யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அதிகாரிகள், உடல்நலக்குறைவோடு இருந்த யானைக்கண்டறிந்து மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். மேலும் 15 வயது மதிக்கத்தக்க இந்த நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்றமையால் மருத்துவ குழுவினர், அந்த யானைக்கு பழங்களின் மூலம் மருந்துகள் கொடுப்பதற்கு வசதியாக இருந்தது. ஆனால் யானை மருந்துகள் உள்கொள்ளாத காரணத்தினால், அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகர் செல்வராஜ் கூறுகையில், யானைக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதோடும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இந்நிலையில் இதற்கான காரணம் என்பது குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார். கோவையில் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக யானைகள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.