திருப்பூர்: தேசிய அளவிலான சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் அமைப்பான லகு உத்யோக பாரதி அமைப்பின் மாநில அளவிலான வருடாந்திர கூட்டம் சமீபத்தில் திருப்பூரில் தேசிய தலைவர், துணை தலைவர் மற்றும் செயலர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர்: தேசிய அளவிலான சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் அமைப்பான லகு உத்யோக பாரதி அமைப்பின் மாநில அளவிலான வருடாந்திர கூட்டம் சமீபத்தில் திருப்பூரில் தேசிய தலைவர், துணை தலைவர் மற்றும் செயலர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் மாநில தலைவராக கோவையைச் சார்ந்த எம்.எஸ். விஜயராகவன், மாநில இணை பொதுச் செயலராக எம்.சிவகுமார், மாநில துணை தலைவராக ஆர்.கல்யாண் சுந்தரம், மாநில செயலராக சி. சுப்ரமணியம், கோவை மாவட்ட தலைவராக எஸ். ரவிச்சந்திரன், செயலராக எம். சத்தியநாராயணன், பொருளாளராக சு.சதாசிவம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக எஸ். மல்லிகா தேவி, பாரதி ஆறுச்சாமி , வெங்கடேஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் பொறுப்பேற்றனர்.
மாநில பொது செயலராக விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ஜெயக்குமார். மாநிலப் பொருளாளராக பி ஆர். மோகன் மற்றும் மற்றொரு மாநில இணை செயலராக சென்னையை சேர்ந்த வேற்.செழியன் போன்றோர்கள் பொறுப்பேற்றனர். இது மட்டும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட பொறுப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் தொடர்சியாக இன்று கோவை மாவட்ட கிளையின் புதிய நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் சிட்கோ கொசிமா அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் முறையே துணை தலைவர்களாக குமரகிரி மற்றும் நல்லதம்பி, இணை செயலாளர்களாக ஷண்முகசுந்தரம், பாரதி ஆறுச்சாமி, ஜெயகாந்தன் மற்றும் இருபது பேர் கொண்ட கோவை நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றனர்.
இக்கூட்டத்துக்கு மாநில தலைவர், மாநில இணை பொது செயலர், மாநில துணை தலைவர் மற்றும் மாநில செயலர், மாவட்ட தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர்கள் மற்றும் இந்நாள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் எஸ்.சுருளிவேல் , நாகராஜன், செளந்தர்ராஜன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். கூட்டத்தில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான முன்னேற்றத்திற்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
தேசிய அளவிலான இவ்வமைப்பில்முதல் முறையாக தமிழகத்தில் தான் ஆறு தூண்களை கொண்ட குழு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக மற்றும் நிதி மேலாண்மைக்காக இரண்டு தூண்களும், உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் போன்றவற்றைப் புதிய, மாநில அரசுக்கு எடுத்து செல்வதற்கும் வேண்டியவற்றைப் பெற்றுத் தருவதற்குமான இரு தூண்களும், தொழில் மேலாண்மை விரிவு படுத்துதல், ஆலோசனை வழங்குதல் தொழில் முனைவோர் மற்றும் அவர்தம் அலுவலர்கள், தொழிலாளர்கள் திறன் மேலாண்மை, தொழிற்சாலை மேம்பாடு திறன் போன்றவற்றைச் செயல்படுத்தி அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான பல நிகழ்ச்சிகள் நூறு எண்ணிக்கை அளவில் நடைபெற்றது. அதை மீண்டும் செவ்வனே நடத்தி தொழில் மேம்பாட்டுக்கு உதவிடத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
மேலும், இவ்வமைப்பின் திருப்பூர் செயற்குழு கூட்டத்தில் தேசிய செயலாளர் மற்றும் மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ உறுப்பினர் மோகன சுந்தரம் ஆலோசனையின் பேரில் மாநிலத்திலேயே முதல் முறையாக குறு தொழில்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளராக வேற்.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தமிழக அரசால் சிறு-குறு நிறுவனங்களுக்காக சுந்தரத்தேவன் தலைமையில் அமைக்கப்பெற்ற குழுவில் சமீபத்தில் கோவை தொழில் வர்த்தக சபையில் பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு தமிழக முதல்வருக்கு தொழில் துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துச் சொன்னோம்.
அது சம்பந்தமான கோரிக்கை மனு முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்து செல்ல சுந்தரத்தேவனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் மானிய கோரிக்கை அறிவிப்பில் கோவை கொசிமா இண்டஸ்ட்ரியல் பார்க்கிற்காக கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் ரூ18.13 கோடி திட்ட மதிப்பில் ரூ.9.06 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் தனியார் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்திய மற்றும் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெருமக்களுக்கும் எங்களது அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த செய்தியை மாநில இணை பொதுச் செயலாளர் எம். சிவகுமார், ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.