மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள் மற்றும் தெரியாமல் குளத்தில் சிக்கித்தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் கோவையில் பேரிடர் மீட்புக்குழு போலீசாருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: இயற்கை பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பேரிடர் மீட்புக்குழுவினர்.
குறிப்பாக மழை, வெள்ளம் போன்ற அசாதாரணக் காலங்களிலும் பொதுமக்களைக்காப்பதில் இவர்களின் பங்கு அளப்பெரிதாக உள்ளது. இவர்களுக்கு அவ்வப்போது இதுப்போன்ற சூழ்நிலையில் மக்களை காக்கும் வழமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினர் சென்னையிலிருந்து 60 பேர் இன்று கோவை வந்திருந்தனர். இந்த வேளையில் இன்று கோவை பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்புக்குழுவினருக்கு பயிற்சியை வழங்கினர்.
இதன் ஒரு பகுதியாக கோவை குறிச்சி குளத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, உயிருக்கு தத்தளிப்பவர்களை எப்படி பாதுகாப்போடு மீட்க வேண்டும்? என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில், தீயணைப்பு துறை வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.