வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பணிபுரியும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் இடையூறுகள் அவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குற்றங்கள் திருமணமான பெண்கள் பாதிப்படையும் வரதட்சணை கொடுமை பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சின்கோனா வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரையாற்றிய வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
மேலும் வரதட்சினை கொடுமை. பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காவல்துறையின் SOS செலியை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், பெண் குழந்தைக்கான அவசர உதவி எண் 181-எண்ணையும் மற்றும் 1098- என்ற கட்டனமில்லா தொலைபேசி எண்ணையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.