கடன்தொகை திரும்ப செலுத்த கால அவகாசம் வேண்டும்; சிறு குறு தொழிலாளர்கள் சங்கத்தினர் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனு!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வாங்கியக் கடன்களை திரும்பப்பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மத்திய அமைச்சருக்கு எம்எஸ்எம்இ ஒருங்கிணைப்பு குழு அனுப்பியுள்ளது.


கோவை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் நிகர மேம்பாட்டிற்கு சிறு, குறு மற்றும் நடுத்த தொழில்நிறுவனங்கள் உலகளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக குறைந்த மூலதனத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெறுவதே இந்நிறுவனங்கள் நோக்கமாகக்கொண்டுள்ளது. மேலும் பலருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது. தமிழகத்தைப்பொறுத்தவரை மின மற்றும் மின்னணு பொருட்கள், தோல் மற்றும் தோல் பொருட்கள், உதிரி பாகங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், ஆயுத்த ஆடை உற்பத்தி போன்ற 13 க்கும் மேற்பட்டவை சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு கீழ் வருகின்றது. இந்நிறுவனங்கள் அனைத்திற்கும் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தான், கோயம்புத்தூரின்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகள்‌ சார்ந்த அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின்‌ சார்பில் மத்திய அமைச்ச‌ருக்கு கோரிக்கை மனு ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், கடன்தொகை மறுசீரமைப்பின்‌ போது தற்போது உள்ள வரையறையான 5௦ கோடி ரூபாய்‌ என்பது உயர்த்தப்பட்டு 100 கோடி ரூபாய்‌ வரை வழங்கப்பட வேண்டும்‌, கடன்தொகை கட்டுவதற்கான கால நீட்டிப்பு வசதி தற்போதுள்ள 31, மார்ச்‌ 2021 என்பது 3௦ செப்டம்பர்‌ 2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும்‌ மற்றும் சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்கு பயன்‌ தரும்‌ வகையில்‌ மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக்கோரிக்கைகள் அனைத்தும் கோயம்புத்தூர்‌ தொழில்‌ அமைப்புகளின்‌ கூட்டுக்குழு சார்பாக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, மாண்புமிகு மத்திய சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌நாராயண்‌ டாட்டு ரானே மற்றும்‌ மத்திய சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறையின்‌ கூடுதல்‌ செயலாளர்‌ மற்றும்‌ மேம்பாட்டு ஆணையர்‌ திரு.தேவேந்திரகுமார்‌ சிங்‌, ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...