கோவை அன்னூர் வழக்கு..! கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளை 7 பேர் கொண்ட குழு வெளியிட்டனர்!

கோவை: கோவை அன்னூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளை இன்று 7 பேர் கொண்ட குழு வெளியிட்டனர்.



கோவை: கோவை அன்னூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சம்பவம் தொடர்பான ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளை இன்று 7 பேர் கொண்ட குழு வெளியிட்டனர்.

கோவை அன்னூர் வட்டம் ஒட்டர் பாளையத்தில் கடந்த மாதம் 6ம் தேதி கிராம அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த காணொலியும், விவசாயி கோபால்சாமி என்பவரை கிராம உதவியாளர் தாக்கிய மற்றொரு காணொலியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விவசாயி கோபால்சாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



இந்த நிலையில், ஆதி தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திராவிட பண்பாட்டுக் கூட்டு இயக்கம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறியும் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 



அவர்கள் கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் இன்று ஆய்வு அறிக்கை, பரிந்துரைகளை வெளியிட்டனர்.

அவர்களின் பரிந்துரைகள்;

ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடத்தப்பட்ட சம்பவங்களின் உண்மைத் தன்மையை அரிய சிபிசிஐடி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காணொலியாக பதிவு செய்யப்பட்ட தொகுப்பை காவல்துறை கைப்பற்றி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதேபோல, விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வீடியோ தொகுப்பை தனித்தனியாக வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றனர்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய தடுப்பு நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...