கோவை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் இன்று தமிழக முதல்வருக்கு வாழ்த்து அட்டையை அனுப்பி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தே விநாயகர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த உத்தரவிற்கு பாஜக வினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலை, முதற்கடவுளான விநாயகர் வழிபாடுகளுக்கானக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்து மக்களின் மனதைப்புண்படுத்தும் வகையில் முதல்வர் அறிவிப்பு அமைந்துள்ளதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதோடு தமிழகம் முழுவதும் உள்ள பாஜக அமைப்பினரும் முதல்வரின் அறிவிப்பிற்கு எதிர்ப்புகளை கூறிவந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டையை தமிழக முதல்வருக்கு அனுப்பி எதிர்ப்புகளை பாஜக வினர் வெளிப்படுத்தினர். இதன் ஒருபகுதியாக கோவையில் இரயில் நிலையம் பின்புறம் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவினர் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டையை அனுப்பி வைக்கும் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைத் தலைவர் பிரேம் முன்னிலை வகித்ததோடு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.