கோவை: மாவோயிஸ்ட் வீரமணி மீது சட்ட விரோத நடவடிக்கை (UAPA) தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை கருமத்தம்பட்டி அருகே சதித்திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் கடந்த 2015ம் ஆண்டு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கடலூரைச் சேர்ந்தவர் வீரமணி (23). இவர் நிபந்தனை ஜாமீனில் கடந்த 2020ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, போலீசார் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்து, மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கடந்த 2020ம் ஆண்டு ஆட்சியரிடம் வீரமணி புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த வீரமணி மீது சட்டவிரோத நடவடிக்கை (Unlawful Activities Prevention Act 1967) தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.