கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விமானங்கள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மே, மாதத்தில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்தது.

ஜூலை மாதத்தில் 11 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் துவங்கியது முதல், தினமும் இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக விமானச் சேவையை நிறுத்திய 'Go Air', 'Spice Jet' நிறுவனங்களின் விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டில்லி, உள்ளிட்ட நகரங்களுக்கும், சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜாவுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல மாதங்களுக்குப் பிறகு இன்று ஒரே நாளில் உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவில் 16 விமானங்கள் இயக்கப்பட்டன.

இதில், 12 விமானங்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ். 2 ஏர் இந்தியா விமானங்கள். ஒரு 'Go Air' விமானம் மற்றும் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ஆகும்.
இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.