கோவை: கோவை - ஷார்ஜா இடையே இந்த மாதம் முதல் வாரத்தில் 4-முறை விமானங்கள் இயக்கப்படும் என ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்குச் சர்வதேச பிரிவில் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் சர்வதேச பிரிவில் தற்பொழுது கோவை - ஷார்ஜா இடையே மட்டும் 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் வரை வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1 முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் 'ஏர் அரேபியா' விமானத்தில் 160 பேர் பயணிக்க முடியும்.
இந்த விமானம் ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்கிறது. தவிர ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 2.5 டன் ௭டையிலான கார்கோ இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
காய்கறிகள், பூக்கள், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகம் புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த மாதம் முதல் இனி வாரத்தில் நான்கு நாட்கள் சர்வீஸ் வழங்கப்படும்." இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.