கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தினமும் 10 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை..!

கோவை: கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தினமும் 10 மாணவர்கள் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தினமும் 10 மாணவர்கள் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவ, மாணவியர் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் யாருக்கும் தொற்று பரவல் கண்டறியப்படவில்லை. தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்குச் சளி, காய்ச்சல் மற்றும் பிற உடல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும், மாநகராட்சி சுகாதார துறையினர் சார்பில் நாள்தோறும் ஒவ்வொரு பள்ளிகள் 5 முதல் 10 மாணவர்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...