கோவை: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கோவை சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள பிரதான பாலமான டெக்ஸ்டூல் பாலத்தில் எல்இடி விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கிக் கிடந்தன.

இதனால், இரவு நேரத்தில் செல்லக்கூடியவர்கள் சாலை ஓரங்களில் உள்ள தடுப்புச் சுவர்களில் இடித்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் படும் இன்னல்களை சிம்பிளிசிட்டியில் நாம் புகைப்படம் எடுத்து செய்தியாக பதிவிட்டு இருந்தோம்.

அதனை தொடர்ந்து, இன்று மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து டெக்ஸ்டூல் பாலத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகளைச் சரிபார்த்து உடனடியாக அவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.

இன்று மாலை டெக்ஸ்டூல் பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிந்ததால், இருளில் மூழ்கி இருந்த பகுதி வெளிச்சத்தில் மிளிர்ந்தது. அதிகாரிகளின் துரித நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.