அவிநாசி சாலையில் அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டரா? கார் மோதி விபத்தில் இறந்ததாக நாடகமா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவை: கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் அடையாளம் தெரியாத பெண் கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகள் அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளது போன்று இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் அடையாளம் தெரியாத பெண் கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகள் அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளது போன்று இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று காலை சுமார் 5.45 மணிக்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்துச்சென்ற போது ஸ்டார் ஓட்டல் அருகே உள்ள வளைவு பகுதியில் கார் மோதி உயிரிழந்துள்ளார். இதுக்குறித்து கோவை மாநகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். ஆனால் இது விபத்துப்போன்று தெரியவில்லை எனவும், எங்களால் இந்த வழக்கினை விசாரிக்க முடியாது என போக்குவரத்து போலீசார் மறுத்த நிலையில் தான், இந்த விபத்து பீளமேடு சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கினை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தான், போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. அதில், அடையாளம் தெரியாத அப்பெண்ணின் மீது சொகுசு கார் ஒன்று ஏறி இறங்கி சென்றதும், காரில் வந்த இரண்டு நபர்கள் சுமார் 100 மீட்டர் தூரம் சென்று இறந்துவிட்டாரா? என பார்த்ததாகத் தெரியவந்துள்ளது. ஒருவேளை அப்பகுதியில் வாக்கிங் சென்ற பெண்ணின் மீது கார் மோதி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியப்போது, யாரும் இதுவரை அந்த பகுதியில் பெண் காணாமல் போனதாக எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்நிலையில் தான், இப்பெண்ணினை கடத்தி வந்து, மர்ம நபர்கள் கொலை செய்திருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வாகனம் எந்த வழியாக எங்கே சென்றது என தனிப்படையினர் தேடி வருகின்றனர். முன்னதாக இப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...