கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த காசி பட்டணம் தி.மு.க கிளைச் செயலாளர் காளியப்பன் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காசி பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், வயது 45. இவர் தி.மு.க கிளை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
இவர் பாதாளச் சாக்கடை போன்ற திட்டப் பணிகளுக்கு ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி காளியப்பன் நாட்டுக்கல் பாளையம் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அங்குக் கணவரை இழந்து தனியாக வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அவரின் கையை பிடித்து இழுத்துத் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் பொதுமக்கள் வருவதற்குள் தப்பி ஓடி விட்டார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்துத் தலைமறைவாக இருந்த காளியப்பனைக் கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பொள்ளாச்சி ஜே.எம் எண் 2- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.