மழைநீர் வடிகால் கால்வாயை சுத்தப்படுத்தவும், மருத்துவமனைகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆய்வு நடத்திய கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், மழைக்காலம் என்பதால் மழை நீர் வடிகால் கால்வாயைத்தூய்மைப்படுத்தவும், மருத்துவமனைகளில் சுகாதாரப்பணிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆய்வு நடத்திய கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், மழைக்காலம் என்பதால் மழை நீர் வடிகால் கால்வாயைத்தூய்மைப்படுத்தவும், மருத்துவமனைகளில் சுகாதாரப்பணிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ வளர்ச்சிப்பணிகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் செய்து ஆய்வு நடத்தினார்.



ஆய்வின் போது கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.56க்குட்பட்ட சந்திரகாந்தி நகர்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலத்திற்கு சென்ற ஆணையர், அந்த மண்டலத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப்பணியாளார்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை பார்வையிட்டார். அதன் பின்னர், கொரோனா காலக்கட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களில் ஒருவராக தூய்மைப்பணியாளர்கள் விளங்கி வருவதால் மக்கள் நலன் கருதி, நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும் என கூறினார். மேலும் வீடு தோறும் குப்பைகளை மக்களிடமிருந்து சேகரித்து வரும் நிலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், மழை நீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ளக் குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் கால்வாயினைச் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், கொசுவினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். இதோடு மாநகராட்சிப்க பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் முறையாக முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினிக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும் எனவும் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் தடுப்பூசியை அனைவரும் தவறாமல் செலுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.



இதனையடுத்து கோவை விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், காப்பிணி

தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, தாய்‌ சேய்‌ நல

பாதுகாப்பு அட்டையில்‌ பதிவு செய்து, பராமரிப்பது குறித்த புதிய வேடுகளையும்‌, புற நோயாளிகளின்‌ பதிவேடு மற்றும்‌ டாக்டா்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்துக் கேட்டறிந்தார்.



பின்னர் அதேப் பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பள்ளியில் உள்ள வகுப்பறை வசதிகள், மின வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும் அப்பள்ளியில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ கட்டிட புனரமைப்புப் பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.



கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா நடத்திய இந்த ஆய்வின் போது, , மாநகராட்சி நகா்நல அலுவலா்‌ மரு.சதீஷ்குமார்‌, செயற்பொறியாளர்‌ (கிழக்கு) திரு.ஞானவேல்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ திரு.ரங்கராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ திரு.சுந்தாராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திரு.முருகா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...