கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு கல்லூரி மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.
பள்ளி, கல்லூரிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சியில் நேற்று, நான்கு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை அடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று நடைபெற்ற பரிசோதனை முகாமில் 300-மாணவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
சோதனை முடிவுகள் நாளை தெரியப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு வருவது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.