கோவை: கோவையில் கண்களில் கூர்மையான பிளேடுகளுடன், ஐஸ் கட்டி மீது கால் முட்டிகளை வளைத்து நின்றபடி, தலையில் தீக்கரகம், இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தைத் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை செய்து அசத்திய மாணவி.

கோவை செலக்கரசல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, மோனிஷா.வீராசாமி, ஜெயந்தி தம்பதியரின் மகளான, இவர் கிராமிய கலைகள் மீது உள்ள ஆர்வத்தால், அதே பகுதியில் வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் முறையாக சிலம்பம் பயின்று வருகிறார்.

இந்நிலையில், சிலம்பம் சுற்றுவதில், உலக சாதனை புரிய விரும்பிய மாணவி மோனிஷா. தனது கடுமையான பயிற்சியால், செலக்கரசல் கிராம மக்கள் முன்னிலையில் மாணவி மோனிஷா ஐஸ் கட்டி மீது தனது கால்களை முட்டி போட்டபடி, நின்று தலையில் தீக்கரகம், கண்களில் கூர்மையான பிளேடுகளுடன், தனது இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தைத் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை படைத்தார்.

தற்காப்பு கலை மற்றும் கிராமிய கலைகளை இணைத்து செய்த, இவரது இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உலக சாதனை படைத்த சாதனை மாணவிக்கு வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவன தலைவரும், கலை பண்பாட்டு பிரிவின் தீர்ப்பாளரும் ஆன டாக்டர் கனகராஜ் மற்றும் கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.