திருப்பூர்: தமிழகத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி கோல்ஊன்றியக் காலக்கட்டத்திலேயே அவர்களை எதிர்த்துப்போராடியதோடு, அவர்களில் ஒருவரை தைரியத்தோடு தூக்கிலிட்டவர் தான் எத்தலப்பர். இவரின் வீரத்தைக் கவுரப்படுத்தும் விதமாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தளி கிராம மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உள்பட்டது தளி கிராமம். உடுமலைப்பேட்டையில் இருந்து தெற்கே 20 கிமீ தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தை 1800 களில் பாளையர்கள் ஆண்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. குறிப்பாக எத்தலப்ப நாயக்க வம்சாவளியினர் 16 பேர் தளி பாளையப்பட்டு பகுதியைப் பெரியப் பாளையமாக அமைத்து, கோட்டைக் கட்டி ஆண்டு வந்துள்ளனர். கி.பி. 1799 ல் வீர பாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, 1801 பிப்ரவரி 2 ல் மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராகப் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்கள் தலைமையில் தளி பாளையமும் போர்க்களத்தில் இறங்கியது. அவர்கள் ஒருவர் தான் எத்தலப்பர். இவர் தனது பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை அரவணைத்து சென்றதோடு மிகவும் தைரியமாக ஆட்சி புரிந்து வந்துள்ளார்.

இவரின் தைரியத்திற்கு உதாரணம் தான் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து தூது வந்த ஆங்கிலேயர் ஒருவரை தூக்கிலிட்டு கொன்றுள்ளார். இன்றும் தூக்குமரத்தோட்டம் என்ற இடத்தில் ஆங்கிலேயரின் கல்லறைகள் இருப்பதைக்காண முடிகிறது. இன்று வரை ஆங்கிலேயரை தூக்கிலிட்டு கொன்ற பெருமைக்குரியவராய் எத்தலப்பர் திகழ்ந்து வருகிறார். மேலும் திப்பு சுல்தான் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோருடன் தொடர்பில் இருந்துவந்துள்ளார் இந்த எத்தலப்பர்.
இந்நிலையில் தான் தமிழக அரசு, சுதந்திரப்போராட்ட வீரர்களை கவுரப்படுத்தும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் தமிழக அரசு, ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென் கொங்கு நாட்டில் பாளையக்காரர்களின் தலைவரும் சொந்த மக்களுக்காக போரிட்ட எத்தலப்பருக்கு திருமூர்த்தி மலை பகுதியில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பைக் கொண்டாடும் இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலக் கோரிக்கைகள் நிறைவேறியது என்று சந்தோஷத்தில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.