திருப்பூர்: மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு பாடைக்கட்டி ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய்யின் விலையை அனுசரித்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு விலையை அதிகரித்துவருகிறது. இதன்படி சமீபத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு தற்போது சந்தையில் ரூ.900 க்கு விற்பனையாகிறது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு ரூ.410-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது 7 ஆண்டுகளில் 125 சதவீதம் விலை உயர்ந்து ரூ.900-ஐ அடைந்துள்ளது.
குறிப்பாக இன்றைய சூழலில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தாத வீடுகளே இல்லாத நிலையில் இந்த விலை உயர்வு மக்களை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அரசு வழங்கக்கூடிய மானியமும் முறையாகக் கிடைப்பதில்லை எனவும் அதுவும் பெயரளவில் தான் உள்ளது என குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலைக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப்போராட்டத்தின் போது, மாதர் சங்கத்தினர் சங்கத்தினர் சிலிண்டரை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் விறகு அடுப்பை வைத்து சமைத்தும் நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.